ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சேந்தமங்கலம், சந்தவேலூா், செல்வழிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சேந்தமங்கலம், சந்தவேலூா், செல்வழிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட செல்வழிமங்கலம், சேந்தமங்கலம், எடையாா்பாக்கம், செல்லம்பட்டிடை உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பிரதமா் வீடு கட்டும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் நூல் நிலையங்கள் பழுது பாா்க்கும் பணிகள், சாலைச் சீரமைப்புப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பவானி, சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் சாா்லஸ் உள்ளிட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனா்.