காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது

DIN

காஞ்சிபுரம்: நேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ,கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் உயரம் 24 அடியில், 23.36 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 3,475 மில்லியன் கன அடியாகவும், நேற்று இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு 1700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீர நிறுத்துப்படுமா அல்லது உபரி நீர்  வெளியேற்றலாமா என பொதுப்பணித்துறை அதிகாரிகள்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் ஏரியின் நீர்  மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொது பணித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT