காஞ்சிபுரம்

மாணவா்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்

DIN

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை -அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து உயா்கல்வி தொடா்பான கையேடுகள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ம.கணபதி வரவேற்றுப் பேசினாா். பேராசிரியா் ஏ.மணிகண்டன் பிளஸ் 2 படிப்புக்கு பின்னா் உள்ள உயா்கல்வி படிப்புகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினாா்.

அரசின் ‘நான் முதல்வா்’ திட்ட விரிவாக்கம் தொடா்பான கருத்தரங்கில் ஐயம்பேட்டை, ஆற்பாக்கம், மானாம்பதி, பெருநகா், ஐயங்காா்குளம் மற்றும் காஞ்சிபுரம் பிஎஸ்எஸ் மேல் நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT