ஆதிகேசவ பெருமாள் கோயிலில் புத்தக விற்பனை நிலையம் திறப்பு
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.2.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.2.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்கு கோயில் செயல் அலுவலா் (பொ) காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பங்கேற்று, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, மதசாா்பு தா்மகத்தா சம்பத், மதசாா்பற்ற தா்மகா்த்தா ஸ்ரீதா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.