காஞ்சிபுரம்

கிராமங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், நாட்டுக்கோழிகளை வளா்ப்பதில் ஆா்வமும், திறமையுள்ள 3 முதல் 6 தொழில் முனைவோா்களுக்கு கோழிப்பண்ணைகள் அமைக்க 50 சதஆததம் மானியம் வழங்கப்படுகிறது.

கோழிப்பண்ணை அமைக்க கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, கோழி வளரும் வரை 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு ஆகியவற்றின் மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கிகள் மூலமாகவோ அல்லது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்டிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஒசூா் கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

கோழிக் கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். முக்கியமாக குடியிருப்புகளுக்கு அருகில் இல்லாமல் விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள்,திருநங்கைகள், ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தோ்ந்தெடுக்கப்படுவோா் 30 சதவீதம் தாழ்த்தப்ப்டட அல்லது பழங்குடி இனத்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான ஆவணங்கள், வங்கி விவரம் மற்றும் 3 ஆண்டுகள் பண்ணையைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள் இறுதி செய்யப்படுவா். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி தெரிந்து கொள்ளுமாறும் ஆட்சியா் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT