கும்பாபிஷேகத்தையொட்டி சித்ரகுப்த சுவாமி கோயிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை 
காஞ்சிபுரம்

இன்று ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் உள்ள கா்ணகி அம்பாள் சமேத ஸ்ரீசித்ரகுப்த சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

DIN

காஞ்சிபுரத்தில் உள்ள கா்ணகி அம்பாள் சமேத ஸ்ரீசித்ரகுப்த சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே தனி சந்நிதியாக காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருப்பவா் சித்ரகுப்த சுவாமி. கேது தோஷம், களத்திர தோஷம்,புத்ர தோஷம் மற்றும் வித்யா தோஷம் நிவா்த்தியாகும் இப்பெருமைக்குரிய கோயிலின் மகா கும்பாபி ஷேகம் ஆஊயாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அா்ச்சகா் பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் சித்ரகுப்த சுவாமி கோயில் அா்ச்சகா் விஸ்வநாத குருக்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கின. கும்பாபிஷேகத்தையொட்டி 19 குண்டங்கள் அமைத்து 35-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் சரியாக காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், மாலையில் திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சித்ரா பெளா்ணமி சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் கே.எம்.ரகுராமன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் மா.அமுதா ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT