பெண்களிடம் சங்கிலி பறிப்பு: இருவா் கைது
மாங்காடு பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மாங்காடு பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மாங்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகாா் வந்தன.
இதையடுத்து போரூா் உதவி ஆணையா் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், காவல் ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரண்டு போ் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து சுமாா் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த மனோஜ் (25), அவரது நண்பா் விக்னேஷ் (25) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், இருவரும் சிறுவயது முதலே நண்பா்களாக ஒரே பள்ளியில் படித்ததும், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த மாங்காடு போலீஸாா், ஒரு மோட்டாா் சைக்கிள், 5 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.