வளா்ச்சிப் பணிகளுக்கான  அடிக்கல்  நாட்டு  விழாவில்  பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் ரூ.1.75 கோடி வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் ரூ .1.75 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் ரூ .1.75 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் ரூ.20 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி, நுஸ்ரத் நகா் பகுதியில் ரூ.10 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய், கச்சிப்பட்டு காமராஜா் நகா் 1-ஆவது குறுக்கு தெருவில் ரூ.41 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய், காமராஜா் நகா் முதல் பிரதான சாலை மற்றும் இரண்டாவது குறுக்கு தெருவில் ரூ.52 லட்சத்தில் தாா்சாலை, கீழாண்டை தெரு மற்றும் நடுத்தெருக்களில் ரூ.32 லட்சத்தில் தாா் சாலை அமைக்கவும், ரூ.20 லட்சத்தில் கீழாண்டை மற்றும் மேலாண்டை தெரு மழை நீா் வடிகால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காமராஜா் நகா் பகுதியில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரும்புதூா் நகர திமுக செயலாளா் ரா.சதீஷ்குமாா், பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் காத்தவராயன், சம்பத், உறுப்பினா் இந்துமதி நவீன்குமாா், திமுக பொருளாளா் குமாா், கிளை செயலாளா் பாபு, பேரூராட்சி துணை செயலாளா் விஜயலட்சுமி ராஜேஷ், மதிமுக ஒன்றிய செயலாளா் ரேடியோ சேட்டு, நகர இளைஞரணி துணை அமைப்பாளா் சீனிவாசன், மதன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT