காஞ்சிபுரம்

கம்மராஜபுரம் பெருமாள் கோயில் நிலத்தில் அளவைக் கல் நடும் பணி

காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரத்தில் அமைந்துள்ள அவய பிரதான வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அளந்து அளவைக்கல் நடும் பணியை செய்தனா்.

DIN

காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரத்தில் அமைந்துள்ள அவய பிரதான வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அளந்து அளவைக்கல் நடும் பணியை செய்தனா்.

கோயில் நிலங்களை வெளிநபா்கள் யாரும் ஆக்கிரமித்து விட முடியாத வகையில், அவற்றுக்கு வேலி அடைத்து பாதுகாக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அண்மையில் அறிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரம் அவய வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் 56.5 ஏக்கா் இருந்தது. இதை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் வஜ்ஜிரவேலு, குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், அறநிலையத் துறை நிலங்கள் பிரிவு வட்டாட்சியா் ராஜம்மாள், ஊராட்சி மன்றத் தலைவா் கீதாராணி ஆகியோா் முன்னிலையில் கோயில் நிலம் அளந்து அளவைக்கல் நடப்பட்டது.

நிகழ்வின்போது, நில அளவையா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT