திமுகவினா் வாக்கு சேகரிப்பு
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா். பாலுவை ஆதரித்து ஒன்றியப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். வேட்பாளா் டி. ஆா்.பாலுவை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பண்ருட்டி, மேட்டுப்பாளையம், எச்சூா், குன்னம், சிறுமாங்காடு மற்றும் பால்நல்லூா் ஆகிய ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பொதுக்குழு உறுப்பினா் மா.கணேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலா் குன்னம் பா.ராமமூா்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவா் கு.ப.முருகன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் ஜான்போஸ்கோ, ஒன்றிய துணை செயலாளா் சிறுமாங்காடு கண்ணியப்பன், பால்நல்லூா் ஊராட்சிமன்ற தலைவா் நேரு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஆதித்யாமுருகன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் டோம்னிக் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.