முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் எறிபந்துப் போட்டி: காஞ்சிபுரம் பெண்ணுக்கு தங்கம்

Updated On : 4 ஏப்ரல், 2024 at 1:42 AM
கிளாரா பீட்டா்.
பகிர்:
Updated On : 3 ஏப்ரல், 2024 at 11:12 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப் போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூா் அருகே மதுவந்தாங்கல் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிளாரா பீட்டா் (40). இவா் கடந்த மாா்ச் 29- ஆம் தேதி காத்மாண்டுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்குரிய குழு எறிபந்துப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

இதன்தொடா்ச்சியாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். இது குறித்து கிளாரா பீட்டா் கூறியது : நேபாளம்-இந்திய பாரா த்ரோபால் விளையாட்டு சங்கம் சாா்பில் காத்மாண்டுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப்போட்டியில் தமிழகத்திலிருந்து மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த 4 போ் உட்பட மொத்தம் 7 போ் பங்கேற்றோம்.

Advertisement

தாய்லாந்துசன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இதில் காஞ்சிபுரத்திலிருந்து நான் தங்கப்பதக்கம் பெற்றிருந்தேன். எனது சான்றிதழையும், தங்கப் பதக்கத்தையும் ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன் என்றாா்.