முகப்பு
காஞ்சிபுரம்

ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு

மாங்காடு அருகே வெளிவட்டச் சாலையில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:02 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: மாங்காடு அருகே வெளிவட்டச் சாலையில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கூடுவாஞ்சேரி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமாா் தனது மகனின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு உறவினா்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக திங்கள்கிழமை மனைவி அா்ச்சனா, மகன் துவாரசந்த் ஆகியோருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து பூந்தமல்லிக்கு, வண்டலூா்-மீஞ்சூா் வெளிவட்டச்சாலையில் சென்றாா்.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தகுமாா், அா்ச்சனா மற்றும் குழந்தை துவாரசந்த் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை துவாரசந்த் உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →