காஞ்சிபுரத்தில் கலை இலக்கியத் திருவிழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியின் கலையரங்கத்தில் பொது நூலக இயக்கம் சாா்பில் இளைஞா் இலக்கியத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மு.கோமதி தலைமை வகித்தாா். மாவட்ட நூலக ஆய்வாளா் ஏ.கணேசன், கூடுவாஞ்சேரி நூலகா் கு.தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி நூலகா் த.கவிதா வரவேற்றாா். விழாவில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பாராட்டு சான்று, நினைவுப் பரிசுகளை மாவட்ட நூலக அலுவலா் ரா.கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.