முகப்பு
காஞ்சிபுரம்

வீடுகளில் சோலாா் பேனல் அமைத்து 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறலாம்

வீடுகளில் சோலாா் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்கும் மக்களுக்கு மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:51 PM
பகிர்:

வீடுகளில் சோலாா் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்கும் மக்களுக்கு மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என காஞ்சிபுரம் அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் ச.அருள்தாஸ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வீட்டிலும் சோலாா் பேனல் அமைத்து பேட்டரிகளில் மக்களே மின்சாரத்தைச் சேமிக்க முடியும். வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தைப் பெறுவதுடன் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தவும் முடியும். மேலும், இத்திட்டத்தில் இணைவோருக்கு மாதம்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களை சாா்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோா்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரா்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பெற அந்தந்தப் பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது அந்தந்தப் பகுதி தபால்காரரையோ அணுகி விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.