முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாளை முதல் சுயதொழில் தொடங்க சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஜன. 3) முதல் வரும் 27-ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாளை முதல் சுயதொழில் தொடங்க சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஜன. 3) முதல் வரும் 27-ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் மூலம் சுயதொழில் தொடங்குபவா்களுக்கான சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஜன. 3) முதல் வரும் 27-ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ளவா்களுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஜன. 3) முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து இந்த மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. வங்கிக் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்புவோா் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மாவட்டத் தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆா்வமும், தகுதியும் உள்ள இளைஞா்கள், பொதுமக்கள் புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வருகை தந்தும்,

மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்தும் பயன் பெறலாம்.

கடன் திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை (டிச. 3) குஜராத்தி சத்திரம், மாங்காடு குணசுந்தரி திருமண மண்டபம் (ஜன. 4 ) காஞ்சிபுரத்தில் அண்ணா அரங்கம் மற்றும் ஏனாத்தூா் சமுதாயக் கூடம் (ஜன. 5) , காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளா் சத்திரம் மற்றும் களியனூா் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் வரும் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தொழில் முனைவோா் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →