முகப்பு
காஞ்சிபுரம்

லாரிகள் மோதல்: இருவா் மரணம்

Updated On : 20 மார்ச், 2024 at 10:41 PM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 8:38 PM

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32).

லாரி ஓட்டுநரான இவா், ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியில் இருந்து லாரியில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற இரும்பு லோடு ஏற்றிச் சென்ற மீது நவீன்குமாா் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் அந்த லாரியின் முன்பகுதியில் அமா்ந்து வந்த சித்தூா் பகுதியை சோ்ந்த ரகு (40), குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (50) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.