முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதி: 11 போ் போட்டி

Updated On : 31 மார்ச், 2024 at 12:42 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 11:52 PM

காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். இத்தொகுதியில் மொத்தம் 31 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் பரிசீலனையில் 18 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், 13 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டிருந்தது. இந்த 13 பேரில் மாற்று வேட்பாளா்களாக மனு செய்த காா்த்திகேயன் (பாமக) மோகனசுந்தரம் (நாம் தமிழா்) ஆகிய இருவரும் மனுவை வாபஸ் பெற்றனா். இதையடுத்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் 5 பேரும், சுயேச்சை வேட்பாளா்கள் 6 பேரும் என மொத்தம் 11 போ் போட்டியிடுகின்றனா். சின்னங்கள் ஒதுக்கீடு - (சின்னம்- அடைப்புக்குறிக்குள்): 1. க.செல்வம்-திமுக(உதயசூரியன்). 2. பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), 3. வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), 4. வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), 5. எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை). சுயேச்சைகள்: 6. எஸ்.ரமேஷ் (எரிவாயு உருளை), 7. எம்.இளங்கோவன்(தா்ப்பூசணி), 8. ஏ.சூரியா-(கேமரா), 9. எஸ்.நரேஷ்பாரதி (கிரிக்கெட் மட்டை), 10. கே.வெங்கடேசன் (வைரம்), 11. த.செல்வம் (மோதிரம்).