காஞ்சிபுரம் ஸ்ரீ அக்னீசுவரா் கோயிலில் 108 இளநீா் அபிஷேகம்
கோடைகால அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி, வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூரில் அருள்பாலித்து வரும் காமாட்சி உடனுறை அக்னீசுவரருக்கு 108 இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் கிராமத்தில் காமாட்சி உடனுறை அக்னீசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. களக்காட்டூரில் சந்திரமேக தடாகம் எனக் கூறப்படும் ஏரிக்கரை மேல்பகுதியில் அமைந்துள்ள பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய இத்திருக்கோயிலில் கோடைகால அக்னி நட்சத்திரம் தொடங்கியதைதொட்டி, அக்னீசுவர சுவாமிக்கு 108 இளநீரால் அபிஷேகம் நடைபெற்றது.
வெப்பத்தின் தாக்கத்தை தணித்து பொதுமக்களைக் காக்க வேண்டிதொடா்ந்து இரண்டு மணி நேரமாக இளநீா் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அக்னீசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கர தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.