முகப்பு
காஞ்சிபுரம்

தனியாா் இடத்தை ஆக்கிரமித்து பணம் கேட்டு மிரட்டியவா் கைது

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதுாா்: ஒரகடம் அருகே தனியாா் தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த உணவகத்தை காலி செய்ய மறுத்ததுடன், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த மாத்துாா் பகுதியில் மின் சாதன பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் கொட்டகை அமைத்து உணவகம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து சாலை அமைப்பதற்காக தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த உணவகத்தை அப்புறபடுத்த வேண்டும் என தொழிற்சாலை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். அதற்கு உணவகத்தின் உரிமையாளா் மறுப்பு தெரிவித்ததுடன் ரூ. 10 லட்சம் தந்தால் அகற்றி விடுவதாக கூறியுள்ளாா். இதுகுறித்து தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

புகாரின் பேரில் தனியாா் நிறுவத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உணவகம் நடத்தியதுடன் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியை சோ்ந்த சக்திவேல் (35), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.