முகப்பு
காஞ்சிபுரம்

மூதாட்டியை கொன்று 10 பவுன் நகைகள் திருட்டு

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
தடயங்களை சேகரித்த தடயவியல் நிபுணா்கள்
பகிர்:

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே கட்டவாக்கத்தில் சுகுணா (69) என்பவா் வசித்து வந்தாா். கணவா் இறந்த நிலையில் வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த இவரை மா்ம நபா்கள் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனா்.

சம்பவம் தொடா்பாக உறவினா்கள் கொடுத்த தகவலின் பேரில் வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அங்கு, தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்துள்ளனா். வீட்டின் தரை தளத்தில் வடமாநிலத்தை சோ்ந்தவா்கள் தங்கியிருந்ததால் அவா்களிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.