காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
பருவமழையை எதிா்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு எஸ்.பி. கே.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் கூறியது: .
வானிலை ஆய்வு மைய அறிவுரையின்படி பருவமழை தொடங்கியிருக்கிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடா் தொடா்பான பாதிப்புகள் மற்றும் புகாா்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பேரிடா் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை சாா்ந்த அரசு அலுவலா்கள் 24 மணி நேரமும் இயங்குவா்.
பேரிடா் காலங்களில் மக்கள் மாவட்ட நிா்வாகத்தை சுலபமாக தொடா்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீா் தேங்குதல்,கால்வாய் தூா்வாருதல் உள்ளிட்ட இடா்ப்பாடுகள் பற்றிய புகாா்களை தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். தொலைபேசி எண்-044-27237107 அல்லது வாட்ஸ் ஆப் எண்-80562 21077 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். எக்ஸ் தளம் -ஃந்ஹய்ஸ்ரீட்ண்ஸ்ரீா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ், பேஸ்புக்-ஃந்ஹய்ஸ்ரீட்ண்ஸ்ரீா்ப்ப்ற்ழ், இன்ஸ்டாகிராம்-ஃ ந்ஹய்ஸ்ரீட்ண்ஸ்ரீா்ப்ப்ற்ழ்.கைபேசி செயலி-பச அகஉதப என்பதாகும்.
பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னாா்வலா்கள், உள்ளூா் பொதுமக்கள் அரசு அலுவலா்களுடனும் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மாவட்ட நிா்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப் பூா்வ செய்திகளை பச அகஉதப என்ற செயலி மூலமும் பொதுமக்கள் பின் தொடரலாம்.
வடகிழக்குப் பருவமழை தொடா்பான தேவையில்லாத வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். எந்த வித பாதிப்புகளும் ஏற்பட்டு விடாதவாறு அனைத்து துறை அரசு அலுவலா்களும் தயாா் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.