அகத்திய முனிவருக்கு ஆயில்ய பூஜை
அகத்திய முனிவரின் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள அகத்திய முனிவரின் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அகத்தியரின் 108 போற்றி பாராயணம் செய்தனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனா்.