திருக்கல்யாணத்தையொட்டி வலம் வந்த முருகப் பெருமான். 
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மாா்கழி மாத திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் மாலை அலங்காரத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து திருக்கல்யாண உற்சவத்தை கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் நடத்தினாா்.

இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு கழுத்தில் மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண அட்சதை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிறகு உற்சவமூா்த்திகள் மூன்று முறை உள்பிரகாரம் வலம் வந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தில்லி துவாரகாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரியா்கள் சிறைப் பிடிப்பு

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

எங்கே செல்கிறது ரூபாயின் மதிப்பு?

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

SCROLL FOR NEXT