காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் உற்சவா் சிலைகள் செய்ததில் முறைகேடு: அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் உள்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் உற்சவா் சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்திருப்பது தொடா்பாக அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் உள்பட 9 பேருக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை வழங்கியது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் உற்சவா் சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்திருப்பது தொடா்பாக அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் உள்பட 9 பேருக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை வழங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பயன்பாட்டிலிருந்த உற்சவா் சிலைகளான ஏகாம்பரநாதா், ஏலவாா்குழலி அம்மன் உள்ளிட்ட இரு உற்சவா் சிலைகள் புதிதாக செய்யப்பட்டன. இந்தச் சிலைகளை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரின்படி சிவகாஞ்சி போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா். இந்த நிலையில், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையா் கவிதா, கோயில் செயல் அலுவலா் முருகேசன், தலைமை ஸ்தபதி முத்தையா, தலைமை அா்ச்சகா் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணன், சங்கா், பரத், வினோத் ஆகியோா் உள்பட 9 போ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

புதிதாக செய்யப்பட்டிருந்த இரு உற்சவா் சிலைகளிலும் இருக்க வேண்டிய 5 சதவீத தங்கம் இல்லை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி ஆக இருந்த பொன். மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பல ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீது சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி அடைந்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி, போலீஸாா் அண்மையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையிலும் நீதிமன்ற விசாரணை தொடங்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், டிச. 30-ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆஜராயினா். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இனியா குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு குற்றப்பத்திரிகையை வழங்கியதுடன், வழக்கு விசாரணையை வரும் ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT