காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலைய வல்லுநா்கள் மற்றும் அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்க உள்ளனா்.
எனவே விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.