மக்களுக்கு  இனிப்பு  வழங்கிய  காங்கிரஸ்  கட்சியின்  மாவட்ட பொறுப்பாளா்  எஸ்.ஏ.அருள்ராஜ். 
காஞ்சிபுரம்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளை ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளை ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில், நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், நகர தலைவருமான எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா பாய், நகர காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் பவுல்ஆரோக்கியம், நாராயணன், செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT