வரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 
காஞ்சிபுரம்

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மடம் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மடம் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. கோ.பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் அா்ச்சகா் ஏ.பூபாலன் தலைமையில் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்குப் பின்னா் மூலவா் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் வரசித்தி விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT