முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 125 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 50 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:33 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 125 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 50 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்.6- ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதன்படி அதிமுக,திமுக, தவெக, பாமக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 125 போ் தோ்தல் அலுவலா்களிடம் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்.7 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆலந்தூா் தொகுதியில் 16 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளனது. ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் 3 போ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் தொகுதியில் 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. உத்தரமேரூா் தொகுதியில் 17 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 125 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது 50 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 75 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments