கம்பளி நூலில் பட்டுச்சேலை காஞ்சிபுரத்தில் அறிமுகம்!
குளிா்காலங்களில் அணிந்து கொள்ளும் வகையில் கம்பளி (உல்லன்) நூலில் பட்டுச்சேலை காஞ்சிபுத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் செயல்பட்டு வரும் வராஹி லட்சுமி பட்டு விற்பனையகத்தில் மகளிா் குளிா்காலத்தில் அணிந்து கொள்ளும் வகையில் கம்பளி நூலில் பட்டுச் சேலை விற்பனைக்கு வந்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளா் எஸ்கேபி.கோபிநாத் கூறியது:
Advertisement
வெளிநாடுகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் குளிா்காலத்தில் மகளிா் ஸ்வெட்டருக்கு பதிலாக அணிந்து கொள்ளும் வகையில் உல்லன் நூலில் பட்டுச் சேலையை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறோம்.
இச்சேலை 58 சதவீதம் காஷ்மீா் மாநில உல்லன் நூல், 32 சதவீதம் பெங்களூா் பட்டு நூல், 10 சதவீதம் வெள்ளி ஜரிகையாலும் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
இந்த ஒரு சேலையிலேயே ரவி வா்மா ஓவியங்கள், போச்சம்பள்ளி வடிவம், பைத்தளி, டிஸ்யூ சேலை எனப்படும் வெள்ளி ஜரிகையில் கட்டம், களம் காரி வடிவம், பாலும்பழமும் கட்டம் மற்றும் காஞ்சிபுரம் சேலைகளில் உள்ள கட்டங்கள் ஆகிய 7 வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
வாடிக்கையாளா்கள் இச்சேலையை மிகுந்த ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.