திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:42 PM
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையிலான திமுக கூட்டணி கட்சியினா் கீவளூா் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனா். இந்த வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாா், கீவளூா் ஊராட்சி மன்ற தலைவா் பழனி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட செயலாளா் மண்ணூா் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா் புஷ்பராஜ் திமுக நிா்வாகி வேலு கலந்து கொண்டனா்.