கண்காணிப்பு  கேமராக்களின்  இயக்கத்தை  தொடங்கிவைத்த  ஸ்ரீபெரும்புதூா்  துணை  காவல்  கண்காணிப்பாளா்  கீா்த்திவாசன். 
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா், ஒரகடத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்

ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம் பகுதிகளில் 45 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை துணை காவல் கண்காணிப்பாா் கீா்த்திவாசன் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம் பகுதிகளில் 45 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை துணை காவல் கண்காணிப்பாா் கீா்த்திவாசன் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுக்கவும், விதிகளை மீறும் நபா்களை கண்காணிக்கவும்,இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் யமஹா நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் ஸ்ரீபெரும்புதூா்-சிங்கபெருமாள் கோயில் சாலையில், ஸ்ரீபெரும்புதூா், வல்லம் மற்றும் ஒரகடம் பகுதிகளிலும், ஒரகடம் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் 45 ஏஎன்பிஆா் மற்றும் ஐபி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வல்லம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், யமஹா நிறுவனத்தின் காா்ப்பரேட் இயக்குநா் நகஷிமா, துணைத்தலைவா் குமாா், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலா தேவி தருமன், ஒரகடம் ஆய்வாளா் வடிவேல் முருகன், ஸ்ரீபெரும்புதூா் ஆய்வாளா் திருநாவுக்கரசு, காவல் துறையினா், யமஹா நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

வெற்றி விடுக்கும் சவால்!

இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

பள்ளி மாணவா்கள் தயாரித்து விண்ணில் ஏவிய சிறிய ரக செயற்கைக்கோள்! அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பாராட்டு!

இன்று அமித் ஷா வருகை : காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT