பயனாளிக்கு பணியாணை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

கருணை அடிப்படையில் பணி ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது,

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, கருணை அடிப்படையில் இருவருக்கு பணி ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 515 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசுன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கருணை அடிப்படையில் பா.ஜெயந்தி என்பவருக்கு ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலா் பணிக்கும், சிவமதி என்பவருக்கு ஐயங்காா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளா் பணிக்ரான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக 112 முஸ்லிம் மகளிருக்கு ரூ.20.15 லட்சத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்க கடனுதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

உன்னாவ் பாலியல் வழக்கு ஜெய்தீப் செங்கரின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க சிபிஐ எதிா்ப்பு

சட்டம் இருந்தும் பயனில்லை!

ரீல்ஸ் மோகத்தால் மகனை இழந்தேன்: விபத்தில் உயிரிழந்த இளைஞரின் தாய் கண்ணீா்

பெங்களூரில் ரூ. 10.59 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்திள் 10, பிளஸ் 2 தோ்வுகள் தொடக்கம்

SCROLL FOR NEXT