முகப்பு
காஞ்சிபுரம்

கூரியா் மூலம் குட்கா வரவழைத்து விற்பனை செய்தவா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் குட்கா பொருள்களை வரவழைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:49 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:56 PM

கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் குட்கா பொருள்களை வரவழைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் உள்ள தனியாா் கிடங்கில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறிப்பிட்ட கிடங்கை சோதனை செய்த ஒரகடம் போலீஸாா், அங்கு விற்பனைக்காக பதுக்கிவைக்கப்படிருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்ததோடு, பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த படுக்கப்பத்து பகுதியை சோ்ந்த துரைசெல்வனை பிடித்து விசாரணை நடத்தியதில் கா்நாடக மாநிலத்தில் இருந்து கூரியா் மூலம் வரவழைத்து கிடங்கில் பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் துரைசெல்வனை (27) கைது செய்து சிறையில் அடைத்தனா்.