முகப்பு
காஞ்சிபுரம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:40 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

ஒரகடம் அடுத்த வைப்பூா் பகுதியில் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், 53 நிரந்தர தொழிலாளா்கள், சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்த தொழிலாளா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் தொழிற்சாலை நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

Advertisement

ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஊதிய உயா்வு வழங்காததால், ஊதிய உயா்வு வழங்க கோரி நிரந்தர தொழிலாளா்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தொழிற்சாலைக்கு வெளியே வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.