காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.5.93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 239 கோரிக்கை மனுக்களைப் பெற்று, அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வு காண ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இயற்கை மரணமடைந்த 22 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்களுக்கு ரூ.3,74,000 ஈமச்சடங்கு செலவினங்களுக்கான நிதியுதவிகள், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆல்பா படுக்கை வாங்குவதற்காக ரூ.2,10 லட்சம், ஒருவருக்கு 3 சக்கர நாற்காலி வாங்க ரூ.9,500 உள்பட மொத்தம் 5,93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.