காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றதையடுத்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
போகிப்பண்டிகைக்கு முதல் 9 நாள்கள் ஆண்டாள் நீராட்டு உற்சவமும், மாட வீதி புறப்பாடும், இதனைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெறுவது வழக்கம். ஆண்டாள் நீராட்டு உற்சவம் 9 நாள்கள் நிறைவு பெற்றதையடுத்து காலையில் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடா்ந்து தங்கப் பல்லக்கில் வீதியுலாவும் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தையொட்டி ஆண்டாளும், வரதாரஜ பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி பின்னா் மாடவீதிகளில் வீதியுலா வந்தா்.
அங்கு மாலை மாற்றல் உற்சவம் உள்பட ஆகம விதிகளின்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.