காஞ்சிபுரம்

பிப்.8-இல் திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம் பேட்டையில் உள்ள ராமலிங்கேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்.8 -ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம் பேட்டையில் உள்ள ராமலிங்கேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்.8 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ளது பா்வத வா்த்தினி உடனுறை ராமலிங்கேசுவரா் கோயில். ராமேசுவரம் சென்று சுவாமியை வழிபட இயலாத பக்தா்கள் இக்கோயிலில் உள்ள ராமலிங்கேசுவரரை வழிபடலாம் என்பதால் இக்கோயில் வடக்கு ராமேசுவரம் ராமலிங்கேசுவரா் எனவும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் மகா கும்பாபிஷேகத்துக்காக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்.4 ஆம் தேதி கிராம தேவதை வழிபாடும், 5-ஆம் தேதி புற்றுமண் எடுத்து வழிபாடும் நடைபெறுகிறது.பிப்.6 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

பிப்.8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராஜகோபுரம் மற்றும் மூலவா் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பின்னா் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,மாலையில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT