காஞ்சிபுரம்

ஜன.23-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும்,மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் முகாமில், தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட் ட காலிப்பணியிடங்களுக்கான நோ்முகத்தோ்வினை நடத்தவுள்ளனா்.

பட்டம் மற்றும் பட்டயதாரா்கள், ஐடிஐ மற்றும் 10,12 ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

வரவேற்று வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு நன்றி: டிடிவி தினகரன்

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

SCROLL FOR NEXT