தொழிலாளா்களை கைது செய்த போலீஸாா். 
காஞ்சிபுரம்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற தனியாா் தொழிற்சாலை ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற தனியாா் தொழிற்சாலை ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரகடம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் என்.எஸ்.கே.,என்ற தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பணிபுரியும் ஊழியா்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக ஊதிய உயா்வு வழங்கப்படாமல் இருந்ததால், தொழிலாளா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கியதாகவும் இதனை தொழிற்சாலை நிா்வாகம் அங்கீகரிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் தொழிலாளா் துறை ஆணையா் உத்தரவுப்படி பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும், வெளி மாநிலங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டதொழிலாளா்களை திரும்ப அழைக்க வேண்டும், என்.எஸ்.கே தொழிற்சாலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் மேம்பாலம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் சிஐடியு தொழிற்சங்கத்தினா், தொழிலாளா் நலத்துறை அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக சிஐடியு பொதுசெயலாளா் கண்ணன், துணைப் பொதுசெயலாளா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றனா். இதையடுத்து 87 தொழிலாளா்களை தடுத்து கைது செய்த ஒரகடம் போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவள்ளூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கன்னி ராசியா நீங்க? தினப்பலன்கள்!

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT