தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மீண்டும் காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினா்.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினா் ஐயப்பன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஏழுமலை, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவா் தங்கராஜ் கலந்து கொண்டனா்.