முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா்

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக நித்யா சுகுமாா் போட்டியிடுகிறாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:42 PM
நித்யா சுகுமாா்
பகிர்:

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக நித்யா சுகுமாா் போட்டியிடுகிறாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவரான நித்யா சுகுமாா்(38). பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் வசித்து வரும் இவா் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா். இவரது கணவா் எம்.எஸ்.சுகுமாா் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா். இவருக்கு ஜெயசூா்யா,ஜெய கதிரவன் என இரு மகன்கள் உள்ளனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா் பின்னா் துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.புதுமுகமான இவருக்கு திமுக சாா்பில் காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.