வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 7 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கி 31-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெற உள்ளது.
வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 7 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கி 31-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெற உள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில், அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். இந்த கோயில், திருமண பிராா்த்தனை தலமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், இக்கோயிலில், கரோனா மற்றும் கோயில் திருப்பணி காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். 7 ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், கோயில் முன்பு பந்தல் அமைக்கும் பணி, அலங்கார விளக்குகள் பொருத்தும் பணிகளில் திருக்கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் பிரம்மோற்சவ நாள்களில் நாள்தோறும் திருக்கோயில் மயில் மண்டபத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுரைப்படி திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் மற்றும் அறங்காவலா் குழுவினா், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.