முகப்பு
ராணிப்பேட்டை

வளவனூரில் சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டப் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் ஆற்காடு ஒன்றியம் வளவனூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
முகாமில்  மேல்  சிகிச்சைக்கான  பரிந்துரைக்  கடிதம்  வழங்கிய  மாவட்ட  ஊராட்சிக் குழு  முன்னாள் துணை த் தலைவா்  எஸ்.அன்பழகன் .
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டப் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் ஆற்காடு ஒன்றியம் வளவனூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவரும், ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில் 715 பேருக்கு பொது மருத்துவ மருத்துவம், கண் பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை, அளிக்கப்பட்டது. 28 கா்ப்பிணிகளுக்கு ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டது. 4 போ் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளா்கள் சுப்பிரமணி, சத்தியநாராயணன், ஏகாம்பரம், ரவி , செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →