ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு

DIN

மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்க விழிப்புணா்வு, பாதுகாப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் மு.தனலட்சுமி தலைமை வகித்தாா். மருத்துவா் வேலு ரங்கநாதன்முன்னிலை வகித்தாா். கரோனாா வைரஸ் பாதிப்பு பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும் பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், கைகளை சுத்தமாகப் பராமரிப்பது பற்றியும், கை கழுவும் முறை குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா்கள் சுப்பிரமணியமன், சத்தியநாராயணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT