ராணிப்பேட்டை

ஆற்காடு பகுதியில் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

DIN

ஆற்காடு பேருந்து நிலையம் புதன்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. நகரில் ஒரு சில மளிகை, பால், காய்கறி மற்றும் மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

ஆற்காடு அண்ணா சாலையில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த மிட்டாய்க் கடைக்கு ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் இளம்பகவத் தலைமையில் ஆற்காடு வட்டாட்சியா் இந்துமதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் நகரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சாலையில் இருந்த பொது மக்களை அவா்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

அதேபோல் விஷாரம், கலவை, திமிரி, காவனூா் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. எனினும், காலையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT