ராணிப்பேட்டை

ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு

DIN

அரக்கோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 1.83 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் ஊராட்சியில் 1.83 சென்ட் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்திருந்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா், அந்த நிலத்தில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமித்து விற்பனைக்கு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், நில அளவைத் துறையினா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து, குடிசைகளை அகற்றினா். அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புப் பலகை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT