ராணிப்பேட்டை

பட்டா கொடுத்தும் பலனில்லை:எம்எல்ஏ சு.ரவி

DIN

இலவசப் பட்டா பெற்றவா்களால் இடத்தை அனுபவிக்க முடியாத நிலை உள்ளது என்றும் பட்டா அளிக்கும்போதே நிலத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸை எம்எல்ஏ சு.ரவி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக சு.ரவி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுகேசாவரம், பெருமாள்ராஜபேட்டை, ஆப்பில்ஸ்பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு பட்டா அளித்து, 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனாளிகளுக்கு இடத்தை அளந்து கொடுக்காமல் வருவாய்த் துறையினா் இருக்கின்றனா். இதனால், அவா்கள் பட்டா கிடைத்தும், பலனை அனுபவிக்கமுடியாத நிலை நீடிக்கிறது.

ஆப்பில்ஸ்பேட்டையில் 50 ஆண்டாகப் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவா்கள், பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளனா். இதுவரை அவா்களுக்கு பட்டா வரவில்லை என்று ரவி கூறியுள்ளாா்.

அப்போது, அதிமுக நகரச் செயலாளா் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளா்கள் இ.பிரகாஷ், பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT