முகப்பு
தங்கக்  கவச  சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த ரத்தினகிரி  பாலமுருகன்.
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
தங்கக்  கவச  சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த ரத்தினகிரி  பாலமுருகன்.
பகிர்:

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் செய்த பின், சிறப்பு பூஜை நடைபெற்றன. காலை முதல் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆற்காடு வரதராஜப் பெருமாள் கோயில், வேப்பூா் ஈஸ்வரன் கோயில், பழைய மாங்காடு பச்சையம்மன் கோயில் மற்றும் திமிரி ஸ்ரீசோமநாத ஈஸ்வரா் கோயிலிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜாபேட்டை அம்மூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புத்தாண்டு தினத்தையொட்டி, ராணிப்பேட்டை நவல்பூா் சாந்த ஆஞ்சநேயா் கோயில், சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில், வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதா் கோயில், தன்வந்திரி சித்தா் பீடம், அம்மூா் கற்பக விநாயகா் கோயில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →