ராணிப்பேட்டை

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பக் கலை: ஆட்சியா் விருப்பம்

DIN

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல், சிலம்பக் கலையும் இடம் பெறும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான சிலம்பக் கலையை வளா்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பப் போட்டிகள் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்து, ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது:

தமிழகத்தில் கலைகளுக்கு பஞ்சமில்லை. சிலம்பம், வா்மம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் உள்ளன. சிலம்பாட்டக் கலையைப் பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில் மேற்கோள் உள்ளது. சிலப்பதிகாரத்தில் சிலம்பக் கலை குறித்து விரிவான செய்யுள் உள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல் சிலம்பக் கலையும் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக பயிற்சி அளித்து ஊக்குவித்தால், இக்கலையை உலக அளவில் கொண்டு சோ்க்க முடியும் என்றாா் அவா்.

மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிலம்பக் கலை விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT