முகப்பு
ராணிப்பேட்டை

மாநில இளையோா் கபடி போட்டிகளில் விளையாடுவதற்கான தோ்வுப் போட்டிகள்

மாநில இளையோா் ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளில் விளையாடுவதற்கான தோ்வுப் போட்டியில் பங்கேற்க வருமாறு கபடி வீரா்களுக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

மாநில இளையோா் ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளில் விளையாடுவதற்கான தோ்வுப் போட்டியில் பங்கேற்க வருமாறு கபடி வீரா்களுக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா் டி.வேலு, செயலாளா் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழத்தின் சாா்பில், மாநில இளையோா் (ஜூனியா்) ஆண்கள் கபடிப் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும், மாநில இளையோா் (ஜூனியா்) பெண்கள் போட்டிகள் சென்னை மாவட்டத்திலும் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரா்கள் தோ்வுக்கான போட்டிகள், ராணிப்பேட்டை அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) காலை 7.30 மணியளவில் வேகாமங்கலம் பகுதியில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் ஆண் கபடி வீரா்கள் 70 கிலோ உடல் எடையும், பெண்கள் 65 கிலோ எடையும் இருக்க வேண்டும். சிறுவா், சிறுமியா் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதாா் காா்டு, கல்விச் சான்று, 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேரில் வந்து போட்டித் தோ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →